< Back
மாநில செய்திகள்
மீன்பிடி குத்தகைக்காகபெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் ரூ.12 லட்சத்துக்கு ஏலம்
தேனி
மாநில செய்திகள்

மீன்பிடி குத்தகைக்காகபெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் ரூ.12 லட்சத்துக்கு ஏலம்

தினத்தந்தி
|
24 Jan 2023 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் நேற்று நடைபெற்றது. இதற்கு மீன்வளத்துறை துணை இயக்குனர் பஞ்சராஜா தலைமை தாங்கினார். பெரியகுளம் தாசில்தார் காதர் ஷெரீப் முன்னிலை வகித்தார். ஏலத்தில் 45 பேர் கலந்து கொண்டனர். அரசு நிர்ணய தொகையாக ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டெண்டர் பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வனிதா தேவி, ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்