நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
|வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம்:
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
அதன்பேரில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
கடல் சீற்றம் தணிந்து மீன்வளத்துறையின் மறுஅறிவிப்பு வெளியிட்ட பின் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இன்றும் ஒரு சில நாட்களாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.