ஈரோடு
கல்லூரி மாணவ-மாணவிகளுக்குமாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
|கட்டுரை, பேச்சு போட்டிகள்
மாணவர்களிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளிக்கூடம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு ஈரோடு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளின் நடுவர்களாக பேராசிரியர்கள் இளங்கோவன், விஸ்வநாதன், தனசேகரன், தினேஸ்வரன், சரவணக்குமார், குருமூர்த்தி, கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோர் செயல்பட்டனர்.
கவிதை போட்டியில் திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர் பிரதாப் முதல் இடத்தையும், கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி ரஞ்சிதா 2-வது இடத்தையும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை சேர்ந்த கார்த்தி 3-வது இடத்தையும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவி ச.சந்தியா முதல் இடத்தையும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவி செ.சந்தியா 2-வது இடத்தையும், கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி சீ.கீர்த்தனா 3-வது இடத்தையும், பேச்சு போட்டியில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை சேர்ந்த மு.கவுரிமனோகரி முதல் இடத்தையும், சித்தோடு வாசவி கல்லூரி மாணவர் மு.வாஞ்சிநாதன் 2-வது இடத்தையும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த அமல்உன்னிகிருஷ்ணன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இதில் முதல் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-வது இடத்தை பெற்றவர்களுக்கு தலா ரூ.7 ஆயிரமும், 3-வது இடத்தை பெற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.