< Back
மாநில செய்திகள்
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் - மருத்துவர்களிடம் விசாரணை
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் - மருத்துவர்களிடம் விசாரணை

தினத்தந்தி
|
30 Nov 2022 4:01 PM IST

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் மருத்துவர்களிடம் டிசம்பர் 6 ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர் மற்றும் பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதற்கு மருத்துவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், 2 மருத்துவர்களிடம் டிசம்பர் 6 ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, விசாரணை அதிகாரி, துணை ஆணையர் கொண்ட விசாரணை குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்