< Back
மாநில செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்

தினத்தந்தி
|
16 July 2022 2:32 AM IST

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் நடத்தினர்

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்றுமாலை ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாநிதி, ராமாமிர்தம், முத்துராமன், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பனகல் கட்டிடம் முன்பு நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகள் விளக்கக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.






மேலும் செய்திகள்