ஈரோடு
சென்னிமலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு; 3 கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்
|சென்னிமலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு; 3 கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்
சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்த 2 பேக்கரி கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பாலீத்தின் பை பயன்படுத்திய பழமுதிர் நிலையத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பேக்கரி கடைகளில் உள்ள பிறந்தநாள் கேக்கில் அளவுக்கு அதிகமான கலர் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும், காரவகை பலகாரங்களில் கலருக்காக செயற்கை நிரமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை செய்யப்பட்டது.
அசைவ உணவகங்களில் சில்லி சிக்கன், காலிபிளவர் சில்லி போன்றவற்றிற்கு செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது என்று உணவு பாதுகாப்பு அதிகாரி நீலமேகம் கடை உரிமையாளர்களை எச்சரித்தார்.