< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 6 டன் ரசாயன மாம்பழம் பறிமுதல்..!
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 6 டன் ரசாயன மாம்பழம் பறிமுதல்..!

தினத்தந்தி
|
29 Jun 2022 9:48 AM GMT

சென்னை கோயம்பேட்டில் ரசாயனம் தடவி விற்பனை செய்யப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய 6 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரசாயானம் தடவிய மாம்பழங்கள் அழுகிய நிலையிலும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் ஆய்வு நடத்திய 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல் கட்டமாக 6 டன் அழுகிய மற்றும் கெட்டுப்போன, ரசாயனம் தடவப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்