< Back
மாநில செய்திகள்
தேனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
மாநில செய்திகள்

தேனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
17 July 2023 7:25 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த மீன் கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த மீன் கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், தென்கரை பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சத்தீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்