< Back
மாநில செய்திகள்
உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
நீலகிரி
மாநில செய்திகள்

உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
2 Oct 2023 3:00 AM IST

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவில் உள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். தினமும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பான முறையில் சமைத்து பரிமாறப்படுகிறதா என்பதையும், வேறு ஏதேனும் சிரமங்கள் பள்ளி அளவில் இருந்தால், அது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு பொருட்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளதா என்பதை நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் வாஞ்சிநாதன், உதவி இயக்குனர்கள் இப்ராஹீம் ஷா, சாம் சாந்தகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, நகராட்சி ஆணையாளர்கள் ஏகராஜ் (ஊட்டி), பிரான்சிஸ் (கூடலூர்), மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்