< Back
மாநில செய்திகள்
நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம்
சிவகங்கை
மாநில செய்திகள்

நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

விற்பனையாளர்கள் நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, காரைக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் காரைக்குடி நகரில் உள்ள உணவு பொருட்கள் விற்பனையாளர்கள், உணவு பொருட்கள் மறு பொட்டலமிடுபவர்கள், உணவு பொருட்களை பயன்படுத்துவோர் ஆகியோர் மதுரை உணவு பகுப்பாய்வகத்தின் நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தில் மேற்கூறிய உணவு பொருட்களை நேரில் வந்து பரிசோதித்து கொள்ளாம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்