< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்
|3 Jun 2023 1:24 AM IST
வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அகில உலக வேல் திருமடம் தொண்டு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழ் கடவுளான முருகன் அவதரித்த நாளான வைகாசி விசாகமான நேற்று பெரம்பலூா் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவிலில் முருகனுக்கும், வேலுக்கும் அகில உலக வேல் திருமடம் தொண்டு அறக்கட்டளை சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் சுமார் 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாக குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர். வருகிற 24-ந்தேதி வளர்பிறை சஷ்டியையொட்டி பெரம்பலூர் செல்வ விநாயகர் கோவிலில் இந்த அறக்கட்டளை மூலம் அன்னதானம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.