கரூர்
கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் உணவு திருவிழா
|கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் உணவு திருவிழா நடந்தது.
மண்மங்கலம் அருகே பண்டிதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மூத்த மாணவிகள் விடைபெறுதல் விழா மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் பங்கேற்று மாணவிகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைத்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் கண்ணன் மாணவிகளுக்கு மேற்படிப்புக்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
துறைத்தலைவர் சாந்தி துறை சார்ந்த வேலை வாய்ப்பினை பற்றி எடுத்துரைத்தார். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் அவர்களின் மூத்த மாணவிகளுக்கான விடைபெறுதல் விழாவினை நடத்தினர். பின்னர் கல்லூரியில் உணவு திருவிழா நடைபெற்றது. உணவு திருவிழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விதவிதமான உணவு பதார்த்தங்களை சமைத்து கொண்டு வந்து சுவைத்து மகிழ்ந்தனர்.