< Back
மாநில செய்திகள்
கொரோனா காலத்தில் உணவகமின்றி உணவு விநியோகம்? - ஓ.பி.எஸ். கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
மாநில செய்திகள்

கொரோனா காலத்தில் உணவகமின்றி உணவு விநியோகம்? - ஓ.பி.எஸ். கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

தினத்தந்தி
|
29 March 2023 3:12 PM IST

தரமான கட்டிடத்தில் தரமான உணவு வழங்கிய அனைவருக்கும் ரசீது தொகை வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த விடுதிகள், உணவகங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தரமான கட்டிடத்தில் தரமான உணவு வழங்கிய அனைவருக்கும் ரசீது தொகை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். அதே சமயம் அநியாயமான முறையில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்ததாக வழங்கப்பட்ட ரசீதுகளுக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

உண்மையில் தரமான உணவு வழங்கியிருந்தால், அதற்கான ரசீதுகளுக்கு உரிய தொகை நிச்சயமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்