< Back
மாநில செய்திகள்
ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் - விக்கிரமராஜா குற்றச்சாட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

"ஆய்வு என்ற பெயரில் அத்துமீறும் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்" - விக்கிரமராஜா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
8 Jun 2022 5:18 PM IST

உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் அத்துமீறுவதாக புகார்கள் வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

நீலகிரி,

உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கடைகளில் புகுந்து அத்துமீறுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய விக்ரமராஜா, வணிக நிறுவணங்களில் ஆய்வு என்ற பெயரில் கடைகளில் புகுந்து உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் அத்துமீறுவதாக புகார்கள் வருவதாக தெரிவித்தார். இது சம்மந்தமாக துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்த அவர், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் பிளாஸ்டிக ஒழிப்பிற்க்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்.

சமீப நாட்களாக தமிழகத்தில் உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்