< Back
மாநில செய்திகள்
மேம்பால தடுப்பு சுவரில் மோதியது: மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சென்னை
மாநில செய்திகள்

மேம்பால தடுப்பு சுவரில் மோதியது: மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
3 Oct 2023 4:46 PM IST

மேடவாக்கம் மேம்பாலம் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவரான பாலாஜி (20) என்பவருடன் கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்