< Back
மாநில செய்திகள்
மேம்பாலம் கட்டும் பணி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மேம்பாலம் கட்டும் பணி

தினத்தந்தி
|
25 May 2023 12:30 AM IST

குஜிலியம்பாறை அருகே மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் உட்கோட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, குஜிலியம்பாறை அருகே குடகனாறு ஆற்றின் குறுக்கே திருக்கூர்ணம் மற்றும் நரசிங்கபுரம் கிராமத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தஞ்சாவூர் திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளரும், உள் தணிக்கை அதிகாரியுமான கிருஷ்ணசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாலத்தின் தரம் குறித்து உபகரணங்கள் கொண்டு பரிசோதனை செய்தார். இந்த ஆய்வில் கோட்ட பொறியாளர்கள் மோகன காந்தி, முருகானந்தம், உதவி கோட்ட பொறியாளர்கள் சத்யன், ஆனந்த், உதவி பொறியாளர்கள் தினேஷ் பாபு, காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்