< Back
மாநில செய்திகள்
திருச்சியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

திருச்சியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

தினத்தந்தி
|
8 Jun 2023 6:46 AM IST

நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தருகிறார்.

திருச்சி,

தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தருகிறார்.

முதல் அமைச்சர் இன்று திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை முதல் அமைச்சர் செல்லும் வழிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்