< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 6 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 6 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

பெண்ணிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்

ராமநாதபுரம்

திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அயூப்கான் மனைவி புர்கானிபா(வயது 48). இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்க இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த வழியாக ஆட்டோ வந்ததா என்று விசாரித்துள்ளார். அவர் தனக்கு தெரியவில்லை என்று கூறியபோது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புர்கானிபா அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்