< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
லாரி டிரைவரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு
|8 March 2023 12:15 AM IST
லாரி டிரைவரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்தனா்
திருப்புவனம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் மலைராஜ் (வயது 35). லாரி டிரைவர். இவர், கிளீனர் ராஜ்குமாருடன் லாரியை ஓட்டி வந்துள்ளார். திருப்பாச்சேத்தி அடுத்த தூதை விலக்கு அருகே வரும்போது லாரியில் டீசல் இல்லாததால் வண்டியை ஓரமாக நிறுத்தினார். அப்போது வாணியங்குடியை சேர்ந்த விக்னேஷ் (32), சிவமணி, கார்த்திக் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் மலைராஜை வாளால் தாக்கி விட்டு ராஜ்குமாரிடம் இருந்த செல்போன், ரூ.700 ஆகியவற்றைபறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.