< Back
மாநில செய்திகள்
வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
27 Aug 2023 1:00 AM IST

ஓசூர்:

ஓசூர் தாலுகா நல்லூர் அருகே உள்ள எலுவப்பள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 41). இவருடைய மகன் பிரவீன் (20). இவர் காளேஸ்வரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்தசமயம் ஸ்கூட்டரில் வந்த 2 பேர் பிரவீனை வழிமறித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சிவலிங்கம் பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்