< Back
மாநில செய்திகள்
பக்தர்களிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

பக்தர்களிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

தினத்தந்தி
|
14 Jun 2022 12:30 AM IST

உத்தமர்கோவில் தேர்த்திருவிழா கூட்டநெரிசலில் பக்தர்களிடம் 10 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட், ஜூன்.14-

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள உத்தமர்கோவிலில் உள்ள பிச்சாண்டேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்த்திருவிழாவில் நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகர், சீனிவாசா கார்டனைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 62), பிச்சாண்டார்கோவில் நடுகள்ளர் தெருவை சேர்ந்த ஸ்ரீமதி (70) கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் ஜெயலட்சுமி தனது கழுத்தை பார்த்தபோது கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ பறித்து சென்றது தெரியவந்தது. இதேபோன்று ஸ்ரீமதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்