< Back
மாநில செய்திகள்
காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 1:07 AM IST

காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கல்லணை பகுதியை வந்தடைந்த தண்ணீரை கடந்த 16-ந்தேதி அமைச்சர் நேரு, எம்.பி.க்கள் பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டெல்டாவின் கடைமடை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கும்பகோணத்தை வந்தடைந்தது. கும்பகோணம் சோலையப்பன் தெரு விஜயீந்த்ர தீர்த்த சுவாமிகள் மடம் சார்பில் அந்த பகுதியில் உள்ள விஜயேந்திர படித்துறையில் காவிரி நீரை வரவேற்று பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பழங்கள் மற்றும் ரோஜாப்பூக்களை தூவி தீபாராதனை காண்பிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்