< Back
மாநில செய்திகள்
செங்கொடி படத்துக்கு மலர் தூவி மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

செங்கொடி படத்துக்கு மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
29 Aug 2023 1:32 AM IST

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கொடி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, காஞ்சீபுரம் மக்கள் மன்ற போராளி செங்கொடி கடந்த 28-8-2011 அன்று தீக்குளித்து இறந்தார். அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர இளைஞர் அணி தலைவர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் முருகன், பாளையங்கோட்டை ஒன்றிய இணை செயலாளர் பரமசிவபாண்டியன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், மாவட்ட தலைவர் முகமதுகாசிர், சமூக ஆர்வலர் புல்லட்ராஜா, டேனியல், பவுல்ஆதித்தன், பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்