< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா
|27 March 2023 1:00 AM IST
அம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடந்தது.
அரியலூர்:
அரியலூர் நகரில் உள்ள மேலத்தெரு படை பத்து மாரியம்மன், குறிஞ்சான் குளம் தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன், வடக்கு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கைகளில் பூந்தட்டு ஏந்தி மார்க்கெட் தெரு, தேரடி, எம்.பி. கோவில் தெரு, சத்திரம் வழியாக ஊர்வலமாக சென்று, அந்தந்த கோவில்களில் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.