< Back
மாநில செய்திகள்
வேட்டைக்காட்டு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வேட்டைக்காட்டு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
3 April 2023 6:37 PM GMT

வேட்டைக்காட்டு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் வேட்டைக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மேப்பூதகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட மின்னொளி பல்லக்கில் பூக்களை கொண்டு வந்து வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் வேட்டைக்காட்டு மாரியம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதில் மேப்பூதகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். வருகிற 17-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

மேலும் செய்திகள்