< Back
மாநில செய்திகள்
தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
திருச்சி
மாநில செய்திகள்

தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
19 March 2023 8:08 PM GMT

தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதிகாலை முதலே திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து பங்குனி தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி மறு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 4-ந் தேதி இரவில் காளிவட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் உக்கிரமாகாளியம்மன் ஓலை பிடாரியாக தென்னூர் பிடாரி மந்தையில் எழுந்தருளுகிறார். 5-ந் தேதி காலை சுத்த பூஜை நடக்கிறது. தென்னூரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து திருச்சி மந்தையில் நெல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்புசாமி குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் சுவாமி பழைய அக்ரஹாரம் வெள்ளாளர் தெரு, காவல்காரன் தெரு, அண்ணா நகர் என்று தென்னூர் கிராமத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா, 8-ந் தேதி கோவிலுக்கு சுவாமி குடிபுகும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந்தேதி விடையாற்றி வைபவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்