< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம் பகுதியில் பூக்கள் விலை உயர்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமநாதபுரம் பகுதியில் பூக்கள் விலை உயர்வு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் மல்லிகை உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் விலை உயர்ந்துள்ளது.

பூக்கள் விலை

தமிழகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழா கொண்டாடப்படுகின்றது. சரஸ்வதி பூஜை என்றாலே தொழில்கள் செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்து மாலை அணிவித்து பொரி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளில் மல்லிகை, பிச்சி பூ, ரோஜா பூ உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் உயர தொடங்கி உள்ளது.

மேலும் உயரும்

அதன்படி ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை ரூ.1000-த்திற்கும், ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ ரூ.1000-த்திற்கும் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த செவ்வந்தி ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) மேலும் அனைத்து வகை பூக்களின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்