< Back
மாநில செய்திகள்
தோவாளை மார்க்கெட்டில்பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தோவாளை மார்க்கெட்டில்பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனை

தினத்தந்தி
|
9 Feb 2023 9:42 PM IST

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. பிச்சி ஒரு கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி,:

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. பிச்சி ஒரு கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.

தோவாளை பூ மார்க்கெட்

நாகர்கோவில் அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தில் விளையும் பூக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

இங்கு அதிகாலையிலேயே குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரள வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள்.

விலை உயர்வு

இந்தநிலையில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1,000-க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சி நேற்று ரூ.1,750-க்கு விற்பனையானது. இதே போல் ரூ.900-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,500-க்கும், ரூ.900-க்கு விற்பனையான முல்லை ரூ.1,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு வருமாறு:-

அரளிப்பூ ரூ.70, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.60, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.120, துளசி ரூ.40, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.80, கொழுந்து ரூ.70, மருக்கொழுந்து ரூ.100, மஞ்சள் கேந்தி ரூ.55, மஞ்சள் சிவந்தி ரூ.70, வெள்ளை சிவந்தி ரூ.100, தாமரை (100 எண்ணம்) ரூ.1,500, ரோஜா (100 எண்ணம்) ரூ.20, ஸ்டெம்புரோஸ் ஒரு கட்டு ரூ.400-க்கு விற்பனையானது.

இன்று கடைசி வெள்ளி மற்றும் தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என்று வியாபாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்