< Back
மாநில செய்திகள்
பூக்கள் விலை உயர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பூக்கள் விலை உயர்வு

தினத்தந்தி
|
20 Oct 2023 3:45 AM IST

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது.

திண்டுக்கல் பூமார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்து, தேவை மற்றும் பண்டிகை காலங்களில் பூக்கள் விலை உயர்வது வழக்கம்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.600 வரையில் விற்ற மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.900 முதல் ரூ.1,110 வரையில் விற்பனை ஆனது. இதேபோல் கிலோ ரூ.300-க்கு விற்ற கனகாம்பரம் விலை அதிகரித்து ரூ.500 முதல் ரூ.800 வரையிலும் விற்றது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் பூக்களின் விலை உயர்ந்தது. மேலும் ஆயுதபூஜையையொட்டி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால் ேமலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர். மார்க்கெட்டில் (விலை கிலோவில்) முல்லை, ஜாதிப்பூ தலா கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், செவ்வந்தி, சம்பங்கி தலா கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் செண்டுமல்லி, அரளி, கோழிக்கொண்டை தலா ரூ.25-க்கும் நேற்று விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்