< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது.

பரமத்திவேலூர்

பூக்கள் ஏலச்சந்தை

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

விலை உயர்வு

இதையொட்டி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்