< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடைக்கானலில் 17-ம் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது
|10 May 2024 6:48 PM IST
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா 17-ம் தேதி தொடங்குகிறது
திண்டுக்கல்,
மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா 17-ம் தேதி தொடங்குகிறது.17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது . கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.