< Back
மாநில செய்திகள்
உழைப்பு உழைப்பு உழைப்பு - அது தான் மு.க.ஸ்டாலின்... கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம்...
மாநில செய்திகள்

"உழைப்பு உழைப்பு உழைப்பு - அது தான் மு.க.ஸ்டாலின்..." கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம்...

தினத்தந்தி
|
9 Oct 2022 10:29 AM IST

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் "உழைப்பு உழைப்பு உழைப்பு - அது தான் மு.க.ஸ்டாலின்” என மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இதையடுத்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் "உழைப்பு உழைப்பு உழைப்பு - அது தான் மு.க.ஸ்டாலின்" என மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்