< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கோவில் விழாவில் பூப்பெட்டி ஊர்வலம்
|15 Sept 2023 12:30 AM IST
கோவில் விழாவில் பூப்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
கடையம்:
பாப்பாங்குளம் அருகே உள்ள மயிலப்பபுரம் கிராமம் முப்புடாதி அம்மன் கோவில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு முளைப்பாரிக்கு கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை, அன்னதானம், பால்குட ஊர்வலமும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு நேமிதமாக சிறுவர், சிறுமிகளின் பூப்பெட்டி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை, மஞ்சள் பானையில் நீராடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.