< Back
மாநில செய்திகள்
கம்பி, கான்கிரீட் இல்லாமல் கட்டப்பட்டுள்ள மாடிவீடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கம்பி, கான்கிரீட் இல்லாமல் கட்டப்பட்டுள்ள மாடிவீடு

தினத்தந்தி
|
1 Jun 2022 11:16 PM IST

வேப்பந்தட்டை அருகே கம்பி, கான்கிரீட் இல்லாமல் கட்டப்பட்டுள்ள மாடிவீடு கட்டப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(வயது 30). சிவில் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனது வீட்டை கம்பி மற்றும் கான்கிரீட் இல்லாமல் சுடாத செங்கற்களை பயன்படுத்தி வீடு கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வீட்டை பார்ப்பதற்கு வழவழப்பான கான்கிரீட் வீடு போன்று அழகாக தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த வீட்டில் எங்கும் கம்பி மற்றும் கான்கிரீட் சிறிதளவுகூட உபயோகப்படுத்தப் படவில்லை. அடித்தளம் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் சுவர்கள் அனைத்தும் மண் கல்லால் (சுடாத செங்கல்) கட்டியுள்ளோம். செம்மண்ணை எடுத்து அதில் சிறிதளவு சிமெண்டு சேர்த்து எந்திரம் மூலம் நல்ல அழுத்தம் கொடுத்து மண் கற்களை (செங்கல்) உருவாக்கியுள்ளோம். இந்த கற்களை கொண்டு வீடு கட்டப்பட்டுள்ளது. மேற்கூரைக்கு கம்பி மற்றும் கான்கிரீட் பயன்படுத்தவில்லை. மண் கல்லால் ஆர்ச் வடிவில் கட்டி மேல் தளத்தை முடித்துள்ளோம். இவ்வாறு பழங்கால முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் கோடைகாலத்தில் வெயில் தாக்கம் இல்லாமல் குளு குளுவென இருக்கிறது என்றார்.

மேலும் செய்திகள்