< Back
மாநில செய்திகள்
ஈரோடு அந்தியூர் நகரப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
மாநில செய்திகள்

ஈரோடு அந்தியூர் நகரப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
15 Oct 2022 4:29 PM IST

அணையில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்குள் புகுந்து நேரடியாக வெளியேறி அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 3,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தியூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணையில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்குள் புகுந்து நேரடியாக வெளியேறி அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதே போல் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். குறிப்பாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்