< Back
மாநில செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பு: தலையணை தடுப்பணையில் குளிக்க தடை
மாநில செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பு: தலையணை தடுப்பணையில் குளிக்க தடை

தினத்தந்தி
|
3 Nov 2023 10:46 AM IST

மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தலையணை தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் களக்காடு தலையணை சுற்றுலா பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தடுப்பணையை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் செய்திகள்