< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
|10 Dec 2023 2:53 PM IST
கனமழையின் காரணமாக கோவிலுக்குச் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி வரும் 13-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கோவிலுக்குச் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலின் அடிவாரப் பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.