< Back
மாநில செய்திகள்
டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சேலம்
மாநில செய்திகள்

டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
5 Aug 2022 12:50 AM IST

ஏற்காட்டில் கனமழை எதிரொலியாக டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஓமலூர்:-

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டேனிஷ்பேட்டை ஏரி, காடையாம்பட்டி கோட்டேரி, குள்ளமுடையான் ஏரி, பண்ணப்பட்டி ஏரி, மாரகவுண்டனூர் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி வெள்ளநீர் கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரியில் சென்று வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் நேற்று காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை பகுதிகளில் மழை இல்லாத நிலையிலும் ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையினால் டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையே இல்லாமல் திடீரென மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்