< Back
மாநில செய்திகள்
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
18 Oct 2022 4:33 AM IST

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. அத்துடன் நேற்று பகலிலும் ஓயாமல் பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல சிரமம் அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்கள் மற்றும் புத்தாடை வாங்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் நாகர்கோவில் வந்திருந்தனர். ஆனால் நாள் முழுவதும் மழை கொட்டி தீர்த்ததால் அவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக பேச்சிப்பாறை, கோதையார், சிற்றார், மணலோடை, சுருளகோடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, களியல் நெட்டா போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பதாகை அருவியின் முன்புறம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்