< Back
மாநில செய்திகள்
திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை...!
மாநில செய்திகள்

திற்பரப்பு அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை...!

தினத்தந்தி
|
20 Oct 2022 4:09 PM IST

மலையோரப்பகுதிகளில் மழை நின்றபின்னரும் ஆற்றில் நீர் வரத்து குறையாததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

திருவட்டார்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மலையோரப்பகுதிகளில் பெய்த மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும், பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் வெளியெற்றப்பட்டது.

அணையில் இருந்து வரும் தண்ணீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழை குறைந்தாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் குறையவில்லை.

இதனால் 4-வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பி சென்றனர்.

அருவியின் அனைத்து பகுதிகளிலும் பாறை தெரியாத வகையில் தண்ணீர் பரந்து பாய்கிறது. அருவியில் இருந்து பாயும் வெள்ளத்தில் இருந்து நீர்த்திவலைகள் புகை மண்டலமாய் வெகு தூரத்துக்குத்தெறிக்கிறது. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

மேலும் செய்திகள்