< Back
மாநில செய்திகள்
வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; மண்பாதை அடித்து செல்லப்பட்டது
அரியலூர்
மாநில செய்திகள்

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; மண்பாதை அடித்து செல்லப்பட்டது

தினத்தந்தி
|
28 Aug 2022 12:47 AM IST

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கால் மண்பாதை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

செந்துறை:

வெள்ளப்பெருக்கு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைக்காட்டிற்கும்-சவுந்தர சோழபுரத்திற்கும் இடையே வெள்ளாற்றில் ரூ.11 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான இணைப்புச் சாலை சீரமைக்கப்படாததால் ஆற்றின் குறுக்கே, மண்பாதை அமைத்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே உடனடியாக மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்