< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
|31 Aug 2022 11:31 PM IST
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 15,360 கன அடியாக உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நீர் முழுவதுமாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றுக்கு செல்லவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.