< Back
மாநில செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - குமரியில் நீரில் மூழ்கிய பாலம்
மாநில செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - குமரியில் நீரில் மூழ்கிய பாலம்

தினத்தந்தி
|
2 Aug 2022 10:16 PM IST

சப்பாத்து பாலத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கன்னியாகுமரி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள சப்பாத்து பாலம் ஆற்று நீரில் மூழ்கியுள்ளது.

இதையடுத்து அந்த பாலத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்