< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலம் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு - வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
|15 Oct 2022 9:10 PM IST
வீடுகளில் வெள்ளநீர் புகுந்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள சரபங்கா அற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சரபங்கா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நைனாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.