ஆறுகளில் வெள்ளம்: அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
|கரையோர பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் (03.12.2023) மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் செல்வதால் கரையோர மக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
முகாம்களில் சிரமமின்றி மக்கள் தங்குவதற்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றும் அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.