< Back
மாநில செய்திகள்
பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
மாநில செய்திகள்

பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
31 July 2022 9:21 PM IST

கொடைக்கானல் பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விவசாயிகள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி கடந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது, இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. 5 ம‌ணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக பேத்துப்பாறை பகுதியில் உள்ள பெரியாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆற்றுக்கரையோர பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஆபத்தான முறையில் பெரியாற்றை கடந்து வருகின்றனர். அவ்வாறு வரும் விவசாயிகளில் சிலர் தாங்கள் சாகுபடி செய்த பொருட்களை தலைச்சுமையாக எடுத்து வருகின்றனர். பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படாததால் தான் விவசாயிகள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வரும் நிலை உள்ளது. எனவே பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்