< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
25 Jun 2024 8:57 AM IST

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலிஅருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க இன்று 2வது நாளாக போலீசார் தடை விதித்தனர்.

மேலும் செய்திகள்