< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
|18 July 2022 10:09 PM IST
தஞ்சையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை,
தஞ்சையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.