< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மயிலாடுதுறை திட்டு கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்
|24 Oct 2022 3:53 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசிடம் உரிய நிவாரண உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மயிலாடுதுறை மாவட்டம் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரைத்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. கடந்த 3 நாட்களாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசிடம் உரிய நிவாரண உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.