< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

தினத்தந்தி
|
21 Oct 2022 4:55 PM IST

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை,

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழையாறு துறைமுக முகத்துவாரம் வழியே சென்று தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. அதே சமயம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் விசை படகுகள் மற்றும் பைபர் படகுகள் முகத்துவாரம் வழியே செல்வதில் சிரமம் ஏற்படுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்